டாக்டர் அப்துல் கலாம் ஆதரவற்றோர் கனவு இல்லம்

டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் கனவு இல்லம் 2025ம் ஆண்டு திறக்க திட்டமிட்டுள்ளது 

ஆதரவற்றோர் இல்லம் திறப்பு விழா

ஆதரவற்றோர் இல்லம் கட்டுமான பணிகளுக்கு உதவிகள் தேவைபடுகிறது. விருப்பம் உள்ளவர்கள்உதவி செய்யுங்கள்.

சாதனையாளர் விருது - 2023

சாதனையாளர் விருது - 2023

கனவு மாணவர் விருது 2022

அப்துல் கலாம் ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவில் நடைபெறும் சாதனையாளர் விருது விழாவில் மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் கனவு மாணவர் விருது வழங்கி கௌரவிக்கபடும்.

சாதனையாளர்கள் விருது விழா - 2020

தனித்திறமை, புதிய கண்டுபிடிப்புகள், சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்து வருபவர்களை கௌரவிக்கும் வகையில் நடத்தும் சாதனையாளர்கள் விழா 2020.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...

http://bit.ly/abdulkalamaward2020

அப்துல் கலாம் விருது - 2020

சமூக சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அப்துல் கலாம் விருது - Abdul Kalam Award  வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-09-2020

விண்ணப்ப படிவம்...

https://bit.ly/Abdulkalamaward2020

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

அப்துல் கலாமின் 86 வது பிறந்தநாளை 15-10-2017 அன்று கொண்டாடுவதற்கு முன்பாக நமது Dr.அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மூலமாக தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று உறுதி மொழி செய்துள்ளோம். இந்த திட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு இனைந்து செயல்படலாம். விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த திட்டத்தை நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி! 

இப்படிக்கு
டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி.
Mobile: 9894457002
Webhttp://www.drabdulkalamtrust.org/
Facebook_Pagehttps://www.facebook.com/drabdulkalamtrust/
Mobile_Apphttps://play.google.com/store/apps/details?id=com.drabdulkalamtrust.softkies.drabdulkalamtrust

மாணவர்களுக்கு இலவச மரக்கன்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் இலவசமாக மரக்கன்றுகள் செங்கல்பட்டு தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும்.

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

அப்துல் கலாமின் 85 வது பிறந்த நாள் கொண்டாட்டம் எங்கள் அறக்கட்டளையின் மூலமாக தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக 
நடைபெற்று வருகிறது. எங்களோடு இனைந்து நீங்களும் அய்யாவின் பிறந்தநாளை கொண்டாட விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொண்டு இணையுங்கள்.

சிறந்த சமூக சேவகர் விருது - 2017

அப்துல் கலாம் அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ்நாட்டில் சிறப்பான சமூக பணிகளை செய்து வரும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை கவுரவப்படுதும் விதமாக கலாமின் சிறந்த சமூக சேவகர் - 2017 என்ற விருதினை வழங்க திட்டமிட்டுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும். நிகழ்ச்சி நடைபெறும் இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம். நேரம்: மாலை 4 மணி.

முப்பெரும் விழா - கிருஷ்ணகிரி மாவட்டம்

நமது அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா மற்றும் சிறந்த சமூக சேவகர் விருது என முப்பெறும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

கனவு மாணவர் விருது - 2019

தமிழகம் முழுவதும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தனித்திறமை வாய்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலாமின் கனவு மாணவர் விருது வழங்க உள்ளோம். 

அப்துல் கலாமின் பிறந்தநாள் 2016

அப்துல் கலாமின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நமது அறக்கட்டளையின் சார்பில் பாண்டிச்சேரியில் உள்ள புகழ்பெற்ற சித்தர் பீடத்தில் மரக்கன்றுகள் வைத்து கொண்டாடப்பட்டது.

ஐம்பெரும் விழா

இரண்டாம் ஆண்டு துவக்க விழா, இணையதளம் அறிமுகம், மொபைல் APP அறிமுகம், சிறந்த சமூக சேவகர்கள் விருது மற்றும் பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா மிக சிறப்பாக பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

இலவச இணைய சேவை

திருவள்ளூர் மாவட்டம் புழலில் நமது அறக்கட்டளை மூலமாக இலவச இணைய சேவைகள் நடைபெறுகிறது பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விழிப்புணர்வு பேரணி

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் சார்பாக  பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி மாநகரில் நடைபெற உள்ளது..

இரத்ததான முகாம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துரில் மாபெரும் இரத்ததானம் முகாம் நடைபெறுகிறது.

பாலித்தீன் குறித்த விழிப்புணர்வு - செங்கல்பட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பாலித்தீன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கல்வி உதவித் தொகை - 2021

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற கிழே உள்ள லிங்க் பயன்படுத்தவும் 

 

Application Link: 

 

https://www.hope3.org/apply2021

பிறந்த நாளுக்கு மரக்கன்று நடுதல்

அப்துல் கலாம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பிறந்த நாள் அன்று அவர்களுக்காக நமது அறக்கட்டளையின் மூலம் மரக்கன்றுகள் நடப்படும்.

புதிய கிளை திறப்புவிழா - விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சொரத்தூர் கிராமத்தில் அப்துல் கலாம் அறக்கட்டளையின் புதிய கிளை துவங்கப்படுகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள், பரிசு பொருட்கள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்க உள்ளோம். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

இலவச மருத்துவ முகாம்

அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதனையாளர் விருது - 2024

சாதனையாளர் விருது - 2024

அப்துல் கலாம் விருது - 2019

சமூக சேவை, சிறந்த ஆசிரியர், இளம் விஞ்ஞானி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்கும் நல் உள்ளங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அப்துல் கலாம் விருது - Abdul Kalam Award வழங்கப்பட உள்ளது. குழுவில் உள்ள நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த சமூக சேவை செய்யும் நண்பர்கள் மற்றும் அமைப்புகளை பரிந்துரை செய்யலாம். இந்த தகவலை உங்கள் வாட்சப் குழுவில் பகிருங்கள்.  

விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால் தேர்வு குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்யப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-06-2019

விண்ணப்ப படிவம்...

https://goo.gl/36oTJH

அப்துல் கலாம் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இரத்ததான முகாம்

வேலூர் மாவட்டம் குகையநல்லூரில் அப்துல் கலாம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

அப்துல் கலாம் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் அப்துல் கலாம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பள்ளி மாணவர்களின் அமைதி பேரணி நடைபெறுகிறது.

இரத்ததான முகாம்

அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 23-07-2017 ஞாயிற்றுகிழமை அன்று வேலூர் மாவட்டத்தில் இரத்ததானம் முகாம் நடைபெறுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ஊக்கதொகை வழங்குதல்

அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 23-07-2017 ஞாயிற்றுகிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நூலகம் திறந்து வைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கதொகை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறகிறது. 

அப்துல் கலாம் சிலை திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் கட்டிப்பூண்டி கிராமத்தில் நமது அறக்கட்டளையின் மூலமாக அப்துல் கலாம் அவர்களின் திருஉருவ சிலை திருந்து வைக்கப்பட்டது.

அரசு பள்ளி இணையதளம் அறிமுகம்

தென்மகாதேவமங்களம் அரசினர் உயர் நிலை பள்ளியில் கல்வி விழிப்புணர்வு, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், அரசு பள்ளியின் இணைய தளம் Website அறிமுக  விழாவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலும் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பாகவும் , பள்ளி ஆசிரியர்கள் சார்பாகவும் வருகின்ற திங்கள் 12-06-2017 அன்று 2:00 மணியளவில் நடைபெற உள்ளது இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மாறு கேட்டுக்கொள்கிறோம்

இங்ஙனம்

டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளை
திருவண்ணாமலை மாவட்டம்

உலக சுற்றுப்புற சூழல் தினம்

உலக சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு
உட்பட்ட ஐந்து அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலித்தீன் குறித்த விழிப்புணர்வும் மரக்கன்றுகளும் நடப்படுகின்றது. மேலும் 250 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்,  பள்ளி உபகரணங்கள் அய்யாவின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அப்துல் கலாமின் உருவப்படம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. 
இடம்: சேலம் எடப்பாடி
தேதி: வெள்ளிக்கிழமை 09/06/2017
நேரம்: காலை 10 மணி முதல்
தொடர்புக்கு: சங்கர் மாவட்ட தலைவர்  8508610582

அரசு பள்ளியின்சிறப்பம்சங்கள்

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மை கல்விதுறை அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளையின் மாவட்ட நிர்வாகிகள் மூலமாக செங்கம் ஒன்றியத்தில் துவங்கப்படுகிறது.

கல்லூரி உதவி தொகை - 2018 - 2019

அரசு பள்ளியில் படித்து அதிக அளவில் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான உதவி செய்யப்படும்.

விவசாயிகளுக்காக அமைதி பேரணி

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து மாவட்ட தலைநகரில் அமைதி பேரணி. 

நாள் 30/04/17 ஞாயிற்றுக்கிழமை காலை  10 மணி
இடம்: அனைத்து மாவட்ட தலைநகர்.
                                 
டாக்டர்  அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை  அறக்கட்டளை சார்பில் இந்த பேரணி காவல் துறை அனுமதியுடன்  நடத்தப்படுகிறது.

சமூக ஆர்வலர்களே  நண்பர்களே விவசாயிகள் மீது நலன் கொண்ட தமிழ் நெஞ்சங்களே வாருங்கள்! விவசாயிகள் நலன் காக்க  ஆதரவு தெரிவித்து அமைதி பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். 

அரசு பள்ளி மாணவர் சேர்கை விழிப்புணர்வு

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்கை  வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டதில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

மாண்புமிகு மகளிர் 2020

உங்களுக்கு தெரிந்த சாதனை பெண்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். நாங்கள் அவர்களை கவுரவிக்கிறோம்...

மாண்புமிகு  மகளிர்விருதுக்கான விண்ணப்ப படிவம்...

bit.ly/womensachieversaward

பாலிதீன் ஒழிப்புணர்வு

பாலிதீன் ஒழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் வேலூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

தலைமை அலுவலகம் திறப்பு விழா

அப்துல் கலாம் அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு தங்களை அன்போடு அழைக்கிறோம்!

மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா - நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையதில் அறக்கட்டளையின் மாவட்ட தலைமை அலுவலகம் திறக்கபட உள்ளது.

நாளைய கலாம் விருது - 2024

மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் நாளைய கலாம் விருது வழங்கப்படுகிறது.

இலவச மருத்துவ முகாம்

குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம். 

மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா - தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா - அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா - நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா - அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஜல்லிகட்டு ஆதரவாக அமைதி பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டம் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் சார்பில் வருகின்ற வியாழக்கிழமை (12.01.2017) ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்க மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது. இப்பேரணி கிருஷ்ணகிரி நகரம் அண்ணா சிலை புதிய பேருந்து நிலையத்தில் காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து R C பாத்திமா பள்ளி வழியாக, சென்று பழைய பேட்டை காந்தி சிலை அருகில் நிறைவடையும். தன்மானமிக்க என் தமிழ் இன மக்களே நம்முடைய பாரம்பரிய விளையாட்டினை ஏனோ அவர்கள் தடை செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல பீட்டா என்ற அமைப்பும் பன்னாட்டு தொழில் அமைப்புகள் சிலவும் சேர்ந்து நம்முடைய இனம் அழிய கங்கனம் கட்டிக் கொண்டு அறவே தடுக்க நினைக்கின்றனர். இன்று நாம் நம்முடைய பாரம்பரிய விளையாட்டையும் கலாச்சாரத்தினையும் அடியோடு ஒழிக்க நினைக்கும் மத்திய அரசின் எண்ணத்தினை மாற்றவும் நம்முடைய தன்மானத்தினை காக்கவும் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து நம்முடைய பழம் பெருமைகளையும் கலாச்சாரத்தினையும் பாரம்பரியத்தினையும் காத்து எதிர்கால சந்ததியினருக்கு தெரிவிப்பதும் போற்றச் செய்வதும் நம் கடமை. ஆகவே இந்த பேரணிக்கு பெருந்திரளாகக் கலந்துக் கொண்டு நம் ஆதரவினை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இங்ஙனம் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை கிருஷ்ணகிரி மாவட்டம். தொடர்புக்கு: தலைவர் : 97894 81998 செயலாளர் :96882 32824 பொருளாளர் :96007 60049 ஒருங்கிணைப்பாளர் : 9171717706 மாவட்டப் பொறுப்பாளர்: 9894788831

சாதனையாளர் விருது - 2022

சமூக சேவைகள் புரிபவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கி சிறப்பிக்கப்படும்.